சனி பெயர்ச்சி
சனி பகவான் துலாம் ராசியில் 21.12.2011 முதல்16.12.2014 வரை உச்சம் அடைகிறார்.
சனி பகவான் ஒரு சுற்றை முடிக்க சுமார் முப்பது ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ராசியிலும் அவர் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். அப்படிச் சஞ்சரிக்கும் காலங்களில்,
12ம் இடம், 1ம் இடம், 2ம் இடம் ஆகிய இடங்களில் ஏழரை ஆண்டுச் சனியாகவும்
8ம் இடத்தில் அஷ்டமச் சனியாகவும், நான்கு ராசிகளிலும் சேர்த்து மொத்தம் 10 ஆண்டுகள் பெரும் அளவு தீயபலன்களையே கொடுப்பார்
ஏழரை ஆண்டுச் சனி (எழரை நாட்டுச் சனி என்றும் சொல்வார்கள்) ஜாதகனின் சந்திரன் அமர்ந்த ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில் சனி
வந்த நாள் முதலே துவங்கி ஏழரை ஆண்டுகள் வரை நீடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் ஜாதகருக்குப் பொதுவாக தீய பலன்களே நடைபெறும்.
அனைவருடனும் கருத்து வேறுபாடுகள்,சச்சரவுகள்,வம்பு, வழக்குகள், தொழிலில் நஷ்டம் அல்லது பார்க்கும் வேலையில் தொல்லைகள்,
இடமாற்றங்கள், குடும்பத் தினருக்கு உடல் நலக் குறைவு, மனவேதனை, அமைதியின்மை போன்றவைகள் ஏற்பட்டு ஆட்டிப்படைக்கும்.
போதும்டா சாமி' என்ற அளவிற்குப் பாதகங்களை ஏற்படுத்தி விடுவார்.
பொதுவாக சனி பகவான் 3,6,11 ம் இடத்தில் இருக்கும் போது மட்டும் தான் நல்ல பலனை தருவார். அதன் படி ரிசபம் , கன்னி, தனுசு ராசி காரர்கள் நல்ல பலனை பெறுவார்கள் . மற்ற ராசி காரர்கள் சுமாரான பலன்களை பெறக்கூடும். பலன்கள் பின்வருமாறு,
மேஷம் : எழில் சனி - மனைவிக்கு உடல் நல கேடு, திருமண தாமதம்
ரிசபம் : ஆறில் சனி -- அற்புதமாக இருக்கும் -முன்னேற்றம்
மிதுனம் :ஐந்தில் சனி-- புத்திர நோய் நொடி
கடகம் : நாலில் சனி--அர்தாஷ்டம சனி உடல் நல கேடு தூக்கமின்மை
சிம்மம் : மூன்றில் சனி-- ராஜ யோகம்
கன்னி : இரண்டில் சனி -- பாத சனி
துலாம் : ஜென்மத்தில் சனி
விருச்சிகம் : விரயஸ்தானத்தில் சனி
தனுசு : பதினொன்றில் சனி--ஆதாயம் லாபம் வரும்
மகரம் : பத்தில் சனி--காரிய பங்கம் தொழிலில் தொல்லை
கும்பம் : ஒன்பதில் சனி-- முன்னேற்ற தடை
மீனம் : எட்டில் இல் சனி - அஷ்டம சனி - உடல் நல கேடு
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment